3rd of July 2014
சென்னை:தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வந்தவர்
சென்னை:தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வந்தவர்
விஜய் சேதுபதி. ‘ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து புதிய முயற்சிகளை அவர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
அதில் ஒன்றுதான் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இந்த படத்தை தயாரித்து, வசனம் எழுதி நாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்திலும் வழக்கம் போலவே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது 55 வயது மனிதராக நடிக்கிறார். படத்தை பிஜு விஸ்வநாத் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.
இந்தப் படம் தவிர தற்போது “வன்மம், மெல்லிசை, புறம்போக்கு, வசந்த குமாரன்” என ஐந்து படங்களில் நடித்த வரும் விஜய் சேதுபதி, யாருடனும் போட்டி போட விரும்பவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

நான் யாருடனும் போட்டி போட விரும்பவில்லை. யாராவது என்னை போட்டிக்குன்னு கூப்பிட்டால் கூட போக மாட்டேன். சினிமா, நடிப்பு, இது ரெண்டையும் நான் சுவாசிக்கிறேன். மத்தவங்க படங்களையும் கைதட்டி ரசிப்பேன். ஏன்னா நான் முதல்ல ஒரு ரசிகன், அப்புறம்தான் நடிகன். இதுல போட்டி போட என்ன இருக்கு.
அப்படியே அந்த போட்டியில என்னைச் சேர்த்தால் இரண்டு கையையும் தூக்கிட்டு, நான் தோத்துப் போயிட்டேன்னு ஒதுங்கிடுவேன், ” என்கிறார் விஜய் சேதுபதி.
- உங்க நேர்மை…ரொம்ப புடிச்சிருக்கு பாஸ்…
Comments
Post a Comment