19th of July 2014
சென்னை:எந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதில் அமீர்கானை நடிக்க வைக்க
இயக்குநர் ஷங்கர் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு
செய்தி பரவியது. தற்போது எந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினி தான் நடிக்கப்
போவதாகவும், வில்லனாக அமீர்கான் நடிக்கப் போவதாகம் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படம் முடிந்ததும் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பு துவங்குகிறது. எந்திரன் 2 படத்தில் வில்லன் கேரக்டருக்கு ரஜினிக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் விரும்பினார். இதற்கான நடிகர் தேர்வு நடந்து வந்தது.

தற்போது இந்தி நடிகர் அமீர்கானை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்திரன் 2 படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர். எனவே அமீர்கான் நடித்தால் இந்தியில் படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்று கருதி அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
அத்துடன் உலகளாவிய வியாபாரத்துக்கு உதவும் என்றும், திட்டமிட்டு உள்ளனர். அமீர்கானும் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

Comments
Post a Comment