1st of July 2014
சென்னை:ஜெயம் ரவி நடித்த பூலோகம் படம் விரைவில் வெளிவரவிருப்பதாக விளம்பரம்
செய்யப்பட்டு வருகிறது. இப்போதைக்கு வெளிவராது என்று சொல்லப்பட்ட பூலோகம்
படம் வெள்ளித்திரைக்கு வர திடீரென வேகம் பிடித்ததற்கு பின்னால் பலருக்கும்
தெரியாத ஒரு சம்பவம் இருக்கிறது.
என்ன சம்பவம்? பூலோகம் மற்றும் திருமணம்
எனும் நிக்காஹ், ஐ, விஸ்வரூபம் -2 என ஒரே நேரத்தில் நான்கு படங்களை
தயாரித்ததாலும், ஏற்கனவே வெளியான வல்லினம் போன்ற படங்கள் தோல்வியடைந்து
நஷ்டத்தை ஏற்படுத்தியதாலும் கடும் பண நெருக்கடியில் இருந்தது ஆஸ்கார்
பிலிம்ஸ்! அதனால் எந்தப் படத்தையும் ரிலீஸ் பண்ண முடியவில்லை.
பூலோகம் படத்தில் நடித்து முடித்துவிட்டு, அது வெளிவராமல்போனதால் மனக்கஷ்டத்தில் இருந்த ஜெயம் ரவி இது பற்றி பேசுவதற்காக பூலோகம் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவியை சந்திக்க சென்றிருக்கிறார். தன் வருகையை ஏற்கனவே தெரிவித்துவிட்டு சென்ற ஜெயம் ரவியை, என்ன காரணத்தினாலோ சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்திருக்கிறார் ஆஸ்கார் ரவி. அதன் பிறகும் அவரை சந்திக்காமல், தற்போது பிஸியாக இருப்பதாகவும், பிறகு தானே போனில் பேசுவதாகவும் ஆபிஸ்பையனிடம் சொல்லி அனுப்பி உள்ளார் ஆஸ்கார் பிலிம்ஸ்.
அவமானத்தில் முகம் சிவந்துபோன ஜெயம்ரவி கிளம்பி வந்து தன் அப்பா எடிட்டர் மோகனிடம் சொல்ல, அவர் போனிலேயே ஆஸ்கார் ரவியை வறுத்தெடுத்திருக்கிறார். அதன் பிறகு தன் செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஆஸ்கார் ரவி, பூலோகம் படத்தை விரைவில் வெளியிட முயற்சி செய்வதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகே பூலோகம் படத்தை வெள்ளித்திரைக்குக் கொண்டு வரும் வேலையில் இறங்கி உள்ளனர்.
Comments
Post a Comment