18th of July 2014
சென்னை:தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் ‘கத்தி’ படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் டைரக்ஷனில் நடிக்கிறார் என்பது உறுதியான விஷயம் தான். இந்தப்படத்தில் ‘நான் ஈ’ புகழ் சுதீப்பும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் அவராலேயே உறுதி செய்யப்பட தகவல் தான். அது வில்லனாக கூட இருக்கலாம்.
சரி. கதாநாயகி..? தீபிகா படுகோன் என்றார்கள். அப்புறம் ஹன்ஷிகா என்றார்கள்.. ஸ்ருதிஹாசனாக இருக்கலாம் என்று இழுத்தார்கள். இருக்கலாம் என்ன இருக்கலாம்… நான் தான் கதாநாயகி என சீட்டில் வந்து உட்கார்ந்து விட்டார் ஸ்ருதி. தற்போது டிவிட்டரில் அவர் சந்தோஷத்தில் தட்டிய செய்தியில் அது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.
சிம்புதேவனின் காமெடி ஸ்கிரிப்ட்டானது, விஜய்யின் காமெடி நடிப்புக்கு தீனிபோடும் என்பதால் உண்மையிலேயே இது ஒரு ஃபேண்டஸியான கூட்டணியாகத்தான் இருக்கும். இனி நடக்கவேண்டியது என்னவென்றால் விஜய் ‘கத்தியை’ உறையில் போடவேண்டும். ஸ்ருதி ‘பூஜை’யை முடித்துவிட்டு வரவேண்டும். அவ்வளவுதான்.
Comments
Post a Comment