29th of July 2014
சென்னை:விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வெற்றிப்படமான ‘சதுரங்க வேட்டை’யின் கதாநாயகன் நட்டி @ நடராஜன் சுப்ரமணியனுக்கு பாராட்டுக்கள் மலைபோல குவிந்துகொண்டிருக்கின்றன. உடனே அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி விடுவார் என்றுதான் பலரும் நினைப்பார்கள்..
அதற்கேற்ற மாதிரி நட்டியை தேடி வாய்ய்ப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவரது அடுத்த புராஜெக்ட் எது என்றால் விஜய் படத்தில் இணைவதுதான். ஆம்.. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 58வது படத்தின் ஒளிப்பதிவாளர் சாட்சாத் நட்டியே தான். ஏற்கனவே ‘யூத்’, ‘ஜில்லா’ என இரண்டு விஜய் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்தான் நட்டி.
அப்போ நடிப்பு..? அதுவும் தான். ஆனால் இப்போது இல்லை.. அடுத்ததாக நட்டி கதாநாயகனாக நடித்துள்ள ‘கதம் கதம்’ படம் வெளியாக இருக்கிறது. அதனால் விஜய் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவிட்டு, அப்புறம் தான் மீண்டும் நடிப்பது பற்றி முடிவு செய்வாராம் நட்டி.

Comments
Post a Comment