நாளை திருடன் போலீஸ் இசைவெளியீட்டு விழா!!!

10th of July 2014
சென்னை:சிறிது காலம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சரண், இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டார். படத்தின் பெயர் ‘திருடன் போலீஸ்’. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தப்படத்தின் இயக்குனர் கார்த்திக் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். சிறுவயதில் நாம் விளையாடிய திருடன் போலீஸ் விளையாட்டை நவீனமாக்கி திரைப்படமாக இயக்கியுள்ளாராம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை(ஜூலை-10) நடைபெறுகிறது. .
 
குக்கூ’ படம் மூலம் வித்தியாசமான முயற்சிகளுக்கு கைகொடுப்பவர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ள ‘அட்டகத்தி’ தினேஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘ரம்மி’ புகழ் ஐஸ்வர்யா நடித்துள்ளார். சரணின் கேபிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா ஃபிலிம் சார்பில் ஜே.செல்வகுமார் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

Comments