கவிஞர் வாலியின் ஒராண்டு நினைவு விழா - சென்னையில் நடைபெறுகிறது!!!

18th of July 2014
சென்னை:காவியக் கவிஞர் வாலி அவர்களின் ஓராண்டு நினைவு போற்றும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 18) சென்னையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நல்லி குப்புசாமி செட்டி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.


இதில் ‘வாழ்கிறார் வாலி’ என்ற தலைப்பில், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. ‘திரைப்பாடலில்’ என்ற தலைப்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் பேசுகிறார். ‘தத்துவத்தில்’ என்ற தலைப்பில், கவிஞர் நா.முத்துக்குமாரும், ‘கவிதையில்’ என்ற தலைப்பில் பா.விஜயும், ‘இதயத்தில்’ என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தாவும் பேசுகிறார்கள்.

தமிழ் சிமிழ் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி முன்னிலை வகிக்க, மூத்த பத்திரிகையாளர் க.திருநாவுக்கரசு தலைமை தாங்குகிறார். விஜயா தயான்பன் வரவேற்புரை நிகழ்த்த, தமிழ் சிமிழ் நிறுவனர் வெ.தாயன்பன் நன்றியுறை ஆற்றுகிறார்.

Comments