2nd of July 2014
சென்னை:அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால்போதும், கால்ஷீட் கிடைத்தவருக்கு சுலபமாக மினிமம் ஐந்து கோடி லாபம் கிடைத்துவிடும். தற்போதைய சூழலில் அஜித்தின் கால்ஷீட் என்பது ஹாட் கேக். வணிக தரத்தில் முன்னணியில் இருக்கும் அஜித் ஏ.எம்ரத்னத்துக்கு ஆரம்பம் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார்.

அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே அவருக்கே அடுத்தப்
படத்துக்கும் கால்ஷீட் கொடுத்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் அப்படம்
தற்போது வளர்ந்து வருகிறது. ஒரு முன்னணி நடிகர் அடுத்தடுத்து ஒரே
தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுப்பது என்பது மிக அபூர்வமான அரிதான சம்பவம்.
சம்மந்தப்பட்ட தயாரிப்பாளருக்கோ அது ஜாக்பாட். அஜித் புண்ணியத்தில்
ஏ.எம்.ரத்னத்துக்கு ஜாக்பாட் அடித்தது.
இதற்கிடையில் ஷங்கர் இயக்கத்தில், ஒரு படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார் என்றும், அதில் அஜித் நடிக்க இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. இதை எல்லாம் வைத்து திரையுலகில் ஒரு கிசுகிசு அடிபடுகிறது. முன்பு நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடன் கூட்டணி வைத்து சைலண்ட் பார்ட்னராக படம் பண்ணியதுபோல், தற்போது ஏ.எம்.ரத்னத்துடன் பார்ட்னர் ஆகிவிட்டார் அஜித். அதனால்தான் தொடர்ந்து அவருக்கே கால்ஷீட் கொடுக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள்.
Comments
Post a Comment