விஜய்க்கு அஜித்தின் வாழ்த்து!!!

5th of July 2014
சென்னை:இயக்குனர் விஜய்யின் முதல் படமான ‘கிரீடம்’ படத்தில் ஹீரோவாக நடித்து அவரை இயக்குனராக அறிமுகப்படுத்தியதில் அஜித்துக்கு பெரும் பங்குண்டு!
 
சமீபத்தில் இயக்குனர் விஜய் - அமலா பால திருமண்ம் நடந்தது. அப்போது அஜித் கௌதம் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றிருந்தார். இதனால் விஜய் – அமலா பால் திருமணத்தில் அஜித்தால் கலந்துகொள்ள முடியவில்லை. மலேசியா படப்பிடிப்பை முடித்து வந்ததும் அஜித் முதல் வேலையாக, விஜய் - அமலா பால் புதுமண தம்பதியருக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
அறிவுரைகளுடன் கூடிய அந்த வாழ்த்துச் செய்தியில், ‘வாழ்க்கையில் தியாகம் மற்றும் புரிதல் இரண்டுமே மிக முக்கியம். இந்த இரண்டையும் பின்பற்றினால் திருமண வாழ்க்கை இனிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாராம் அஜித்! இந்த வாழ்த்தால் விஜய் – அமலா பால் தம்பதியர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comments