இனி பாக்கி இருப்பது கமல் மட்டும் தான்!!!

18th of July 2014
சென்னை:கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த மாதம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’படம் சூப்பர்ஹிட்டாக ஓடிய வரலாறைப் பற்றி இங்கே திரும்பவும் பேசப்போவதில்லை.. படம் வெளியான சில நாட்களிலேயே இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆனது.
 
இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையில் மனதைப் பறிகொடுத்த விக்டரி வெங்கடேஷ் தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் நடிகை ஸ்ரீப்ரியாவின் டைரக்ஷனில் நடிக்க அக்ரிமெண்ட்டே போட்டு முதல் ஆளாக களம் இறங்க, இன்னொரு பக்கம் இயக்குனர் பி.வாசு ரவிச்சந்திரன், நவ்யா நாயாரை வைத்து கன்னடத்தில் ரீமேக் செய்யும் வேலைகளில் வேகம் காட்டினார்.
 
இதோ இப்போது கன்னடம், தெலுங்கு இரண்டிலுமே படம் வெளியாகி சூப்பர்ஹிட்டாகி உள்ளது. இன்னும் தமிழ் மற்றும் ரீமேக் மட்டும் தான் ஆரம்பிக்கப்படவில்லை. இப்போதைக்கு இந்தியை விட்டுவிடுவோம்.. ஆக தென்னிந்தியாவில் மோகன்லால், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் மூவரும் திரிஷ்யத்தின் மூலம் வெற்றிக்கனியை ருசித்துவிட்டார்கள். இனி பாக்கி இருப்பது கமல் மட்டும் தான்..! மாயாஜாலம் காட்டுவாரா கமல்..?

Comments