யட்சனில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்வாதி!!!

10th of July 2014
சென்னை:கடந்த வருடத்தை பொறுத்தவரை ஸ்வாதிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலுமே வெற்றிப்படங்களாக அமைந்தது. அதேபோல கடந்தமாதம் வெளியான ‘வடகறி’யும் சுவாதியின் நடிப்புக்கு பாராட்டை வாங்கித் தந்ததுடன் ஓரளவு வெற்றிப்படமாகவும் அமைந்தது. 
 
தற்போது இயக்குனர் விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா இருவரையும் வைத்து இயக்கிவரும் ‘யட்சன்’ படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்வாதி. இந்தப்படத்தை யுடிவி நிறுவனம், விஷ்ணுவர்தன் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
 
விஷ்ணுவர்தனின் மியூசிக் பார்ட்னரான யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கிஷோர், தம்பி ராமையா, ஜான் விஜய், ‘பாண்டியநாடு’ புகழ் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படம் பொங்கலுக்கு ரிலீசாகும் வகையில் தயாராகி வருகிறது.

Comments