அரிமா நம்பி' படத்திற்காக தாணு ஏற்பாடு செய்துள்ள ராயல் பிரீமியர் காட்சி!!!

3rd of July 2014
சென்னை:தயாரிப்பாளர்களில் ஒருவரான் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அரிமா நம்பி'. விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்துள்ள இப்படத்தின் மூலம், இந்திய புகழ் பெற்ற டிரம்ஸ் கலைஞர் சிவமணி, இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

பெரிய பொருட்ச் செலவில், உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆனந்த் சங்கர், இப்படத்தின் மூலம் பெரிய இயக்குநராக வலம் வருவார் என்று தயாரிப்பாளர் தாணு புகழாராம் சூட்டி வருகிறார்.


இப்படம், வரும் ஜூலை 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையில், இப்படத்தின் வெளியீட்டை மேலும் பிரம்மாண்டமாக்குவதற்காக, சென்னையில் ராயல் பிரீமியர் காட்சி ஒன்றுக்கு தாணு ஏற்பாடு செய்துள்ளார். பல முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த ராயல் பிரீமியர் காட்சி நாளை, மாலை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் நடைபெறுகிறது.

Comments