ரம்ஜான் பண்டிகை ரிலீஸில் தந்தை-மகன் மோதும் அதிசயம்!!!

10th of July 2014
சென்னை:ஒரே நாளில் தந்தை நடித்த படமும், மகன் நடித்த படமும் வெளியாகி நேருக்கு நேர் மோத இருக்கிறது. என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த மோதல் நடைபெறவிருப்பது மலையாள திரைப்பட உலகில்! சலாம் பப்பு இயக்கத்தில், மம்முட்டி நடித்திருக்கும் ‘மங்கிலிஷ்’ படம் ராம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
 
அதே நாளில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து, லால்ஜோஸ் இயக்கியிருக்கும் ’விக்ரமாதித்யன்’ படமும் ரிலீசாகிறது. இந்த இரண்டு படங்களையும் இதன் தயாரிப்பாளர்கள் ரம்ஜான் தினத்தன்று ஒரே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பது மல்லுவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
 
இதுதவிர திலீப் நடித்துள்ள ‘அவதாரம்’ படமும் அன்றைய தினம் தான் ரிலீசாகிறது. திலீப் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் வெற்றிகளை சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குனர் ஜோஷி. கூடவே லால் ஜூனியர் (நடிகர் லாலின் மகன்) இயக்கியுள்ள ‘ஹாய்.. ஐ ஆம் டோனி’ படமும் இந்த பந்தயத்தில் சேர்ந்துகொள்ள கேரளாவில் களைகட்டப் போகிறது ரம்ஜான்.

Comments