1st of July 2014
சென்னை:பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற தமிழ்த்திரைப்பட நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி, முடிவை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் இப்படியொரு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது அந்த நாளிதழ். அதன்படி 2012 ஆம் ஆண்டின் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற தமிழ்த்திரைப்பட நடிகராக கடந்த அண்டு சூர்யா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

2013 ஆம் ஆண்டின் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற
தமிழ்த்திரைப்பட நடிகர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதில்
ஆர்யாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இவர் கடந்த ஆண்டு பத்தாவது இடத்தில்
இருந்தார்.
கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த சூர்யாவுக்கு இந்த ஆண்டு இரண்டாவது இடமே கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு (2012 ஆண்டுக்கானது) பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருந்த அஜித் தற்போது (2013 ஆண்டுக்கானது) 3 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கடந்த ஆண்டு பட்டியலில் 5 ஆவது இடத்தில் இருந்த தனுஷ் தற்போது 4 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்த தர வரிசையில் விஜய்க்குத்தான் கடுமையான சரிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்த விஜய் தற்போது 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்பட்டவருக்கு ஏற்பட்ட நிலைமையைப்பாத்தீங்களா?
Comments
Post a Comment