1st of July 2014
சென்னை:இது நல்ல செய்தியா.., அல்லது விஜய்சேதுபதியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் செய்தியா என்பது தெரியவில்லை.. வளர்ந்த நடிகர்களுக்கு வித்தியாசமான வில்லனாக நடிக்கவேண்டும் என்கிற ஆசை கட்டாயம் இருக்கும். அதிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடிக்கும் விஜய்சேதுபதிக்கும் வில்லனாக நடிக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் விஜய்சேதுபதி பீட்சா மூலம் புகழ் பெறுவதற்கு முன்னாடியே புதுப்பேட்டை, குருவி, நான் மகான் அல்ல ஆகிய படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டியதுபோல கன்னடத்தில் ஒரு வாய்ப்பு தேடிவந்தபோது ‘ஆகதா’ என்ற படத்தில் வில்லனாக, அதுவும் ஒற்றைக்கண்ணுடன் மிரட்டும் வில்லனாக நடித்திருந்தார்.
2011ல் வெளியான அந்தப்படத்தைத்தான் தற்போது டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்களாம். விஜய்சேதுபதி புகழின் உச்சியில் வசூல் நாயகனாக வலம் வரும் இந்தநேரத்தில், அவர் வில்லனாக நடித்துள்ள இந்தப்படம் வெளியானால் அது என்னமாதிரியான விளைவை ஏற்படுத்தும், இதற்கு விஜய்சேதுபதியின் ரியாக்ஷன் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Comments
Post a Comment