Avan Aval Movie Stills!!! காயன்ஸ் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக விக்னேஷ் நடிக்கும் திகில் படம்!!!

24th of July 2014
சென்னை:Tags : Avan Aval New Movie Photos, Avan Aval Latest Movie Gallery, Avan Aval Unseen Movie Pictures, Avan Aval Film Latest images, Avan Aval Movie Hot Stills, Avan Aval Movie New Pics..
 
காயன்ஸ் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி, வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படம் ‘அவன் அவள்’ . இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கிரீஷ் மிரினாளி. படம் பற்றி இயக்குனர் ராம்கிரீஷ் மிரினாளி கூறும்போது,
குற்றம் ஒன்றை செய்துவிட்டு போலீஸிடம் இருந்து தப்பிக்க அடர்ந்த காட்டிற்குள் அடைக்கலமாகிறான் வெங்கடகிருஷ்ணன். காட்டில் பெரிய பங்களா ஒன்றில் உள்ள ஒரு பெண் ஒருவருடன் பழக்கமாகிகிறது. அந்த பழக்கம் காதலாக மாறி திருமணமும் செய்கிறான். இருவருக்கும் உடல் ரீதியான நெருக்கமும் உண்டாகிறது.
 
அதற்க்கு பிறகு அவள் காணாமல் போகிறாள். யார் அவள்? என்ற திகில் கேள்விக்கு விடைதான் இப்படத்தின் திரைக்கதை. நடிகர் விக்னேஷுக்கு இது ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்’’ என்றார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது...
 
விக்ரம் நடித்த சேது படத்தில் நடிக்க வேண்டியவர் விக்னேஷ். அப்போது விக்னேஷ் பெரிய நடிகர், விக்ரம் ராசியில்லாத நடிகர் விக்னேஷ் கால்ஷீட் கிடைக்காமல் பாலா விக்ரமை நடிக்க வைத்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக சினிமாவில் போராடும் விக்னேஷ்க்கு பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் அமையவில்லை. கிழக்கு சீமையிலே, பசும்பொன், உழவன், கண்ணெதிரே தோன்றினாள், ஆச்சார்யா, ஈசா, உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக புவனக்காடு என்ற படத்தில் நடித்தர்.
 
தற்போது விக்கேனஷ் அவன் அவள் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். தேவி மகாதேவன், சந்திரிகா என்ற இரு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார், ரவி சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
 














Comments