Anjaan Teaser Success Celebration Meet Photos!!! ஸ்டன்ட் நடிகர்களுக்காக பரிந்து பேசிய சூர்யா!!!

9th of July 2014
சென்னை:Tags : Anjaan Teaser Success Celebration Meet Gallery, Anjaan Teaser Success Celebration Meet Pictures, Anjaan Teaser Success Celebration Meet Event Pictures, Anjaan Teaser Success Celebration Meet Stills, Anjaan Teaser Success Press Meet Photos..

நல்ல நடிகர் என்பதோடு, பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருபவர் சூர்யா என்பதால் அவரை எல்லோருக்கும் ரொம்பவும் பிடிக்கும். சூர்யா நடிப்பில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 15-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற படம் ’அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியுள்ள இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு சூர்யா பேசும்போது,

மும்பையில் நடந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நான் கலந்துகொண்டு நடிக்கும்போது எனக்கு சிறிய அளவில் அடிப்பட்டது. நான் ஒரு நடிகர் என்பதால் என்னை கவனிக்கவும், எனக்கு உதவி செய்யவும் நிறைய வசதிகள் மற்றும் நிறைய ஆட்கள் இருந்தார்கள். ஆனால் இதே போன்ற ஒரு நிலைமை ஒரு ஸ்டண்ட் நடிகருக்கு ஏற்பட்டிருந்தால் அவருக்கு எனக்கு கிடைத்தது மாதிரியான கவனிப்போ, ஆதரவோ கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

அதனால் ஸ்டன்ட் இயக்குனர்கள் சங்கத்தினரிடம் பேசி, ஸ்டன்ட் நடிகர்களின் நலம் காக்கும் வகையில் அவர்களுக்கு நிரந்தரமாக ஹெல்த் செக்-அப் செய்யவும், மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பரிந்துரை செய்திருக்கிறேன்’’ என்றார்.

   

Comments