Anjaan - Official Teaser!!! கடந்த சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அஞ்சான்' டீஸர் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வை!!!


8th of July 2014
சென்னை:மாற்றான்' படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யா மிகவும் எதிர்பார்த்து நடித்துள்ள படம் 'அஞ்சான்'. லிங்குசாமியின் இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் முதல் படம். இப்படத்தின் ஒரு நிமிட டீஸர் ஒன்று கடந்த சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
 
 வெளியான 3 நாட்களிலேயே அந்த டீஸரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' டிரைலர் கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. அதை இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சமீப காலத்தில் வெளியான டிரைலர் அல்லது டீஸரில் குறைந்த நாட்களில் அதிகம் பேர் பார்த்த டீஸராக அஞ்சான் படம் அமைந்துள்ளது.

ஒரு ஒப்பீட்டுக்காக சமீபத்தில் வெளிவந்த சில படங்களின் டிரைலரை இதுவரை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று யு டியூப்பில் பார்த்தோம். ஜனவரி 7ம் தேதி வெளியான மார்ச் 15ல் வெளியான 'மான் கராத்தே' படத்தின் டிரைலரை இதுவரை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
 
ஏப்ரல் 14 அன்று வெளியான சந்தானம் நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தின் டிரைலரையும் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கார்த்தி நடித்து விரைவில் வெளிவர உள்ள 'மெட்ராஸ்' படத்தின் டிரைலரை இதுவரை 1 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். இந்த டிரைலரை ஜுன் 23ம் தேதி வெளியிட்டுள்ளனர்.

Comments