68 சேனல்களுக்கு சொந்தக்காரர் வெளியிடும் மலேசிய தமிழ்ப்படம்!!!

6th of July 2014
சென்னை:மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் தான் அஸ்ட்ரோ. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 68 டிவி சேனல்களை சொந்தமாக வைத்திருக்கிறது என்றால் நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா..? இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனமான அஸ்ட்ரோ ஷா நிறுவனம் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்திலும் கால் பதித்துள்ளது.

கடந்தவருடம் ‘அடுத்தகட்டம்’ எனற மலேசிய தமிழ்ப்படத்தை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் தற்போது அடுத்ததாக ‘மைந்தன் என்கிற படத்தை வெளியிடுகிறது. மலேசிய சினிமாவில் கடந்த பத்து வருடமாக நடித்துவரும் நடிகர் சிகே என்கிற குமரேசன் இந்தப்படத்தை இயக்கி நடித்திருப்பதோடு இதன் இணை தயாரிப்பாளராகவும் இருந்து படத்தை தயாரித்திருக்கிறார்.
 
கடந்த பத்து வருடங்களாக நடிக்கவே மாட்டேன் என அடம்பிடித்து வந்த அழகிய தயாரிப்பாளரான ‘புன்னகைப்பூ’ கீதா இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டில் தான் நடத்த வேண்டும் என முடிவு செய்த அஸ்ட்ரோ ஷா நிறுவனம் நேற்று சென்னையில் அதனை சிறப்பாக நடத்தியது.
 
இந்த நிறுவனத்துடனும் புன்னைக்ப்பூ கீதாவுடனும் நெர௭உந்க்கிய நட்பில் இருக்கும் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சமுத்திரகனி, நடிகர் விமல், ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்திருக்கும் மலேசிய அமைச்சர் டத்தோ சாமுவேலின் மருமகளான ஷைலாவும் மலேசிய பாராளுமன்ற உறுப்பினரான சித்ராவும் இந்த விழாவில் பங்கேற்றனர். ஆகஸ்ட்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

Comments