இந்தித் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஹிரித்திக் ரோஷன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம்!!!

20th of July 2014
சென்னை:இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என ரஜினிகாந்த் தான் இருந்து வருகிறார். இவருடைய உண்மையான சம்பளம் என்ன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றாலும் சுமார் 50 கோடி வரையில் இருக்கும் என்று 'எந்திரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பேச ஆரம்பித்தார்கள். படத்தின் வியாபாரத்திற்கேற்றபடிதான் அவருடைய சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற தகவலும் உண்டு. ஷங்கர் இயக்கத்தில் அடுத்து 'எந்திரன் 2' படம் ஒருவேளை உருவானால் அப்போது ரஜினியின் சம்பளம் 50 கோடியைத் தாண்டும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
 
இதனிடையே இந்தித் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஹிரித்திக் ரோஷன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறப் போவதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஷுதோஷ் கௌரிகர் அடுத்து எடுக்கப் போகும் மொகஞ்சதாரோ' படத்தில் நடிப்பதற்காகத்தான் ஹிரித்தி அவ்வளவு சம்பளம் கேட்டிருக்கிறார் என்கிறார்கள்.
 
இந்தப் படம் ஒரு சரித்திரப் படமாக உருவாக உள்ளதாலும் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடைபெறலாம் என்ற விதத்திலுமதான் ஹிரித்திக் அவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கலாம் என்கிறார்கள். ஹிரித்திக் நடிக்கும் படங்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தப் படம் ஒரு சரித்திரப் படம் என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்புக்கு மேலும் அமைய வாய்ப்பிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
 
ஒரு நடிகருக்கே அவ்வளவு பெரிய தொகை சம்பளமாகப் போய் விட்டதென்றால் படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு எவ்வளவு வரும் என்று யோசித்துப் பாருங்கள். இந்தியத் திரையுலகம் விரைவிலேயே 200 கோடி ரூபாய் தயாரிப்புச் செலவை தாண்டிவிடும் என்கிறார்கள்.

Comments