எனது 50 வது படம் நிச்சயம் அஜீத், விஜய், சூர்யா, மாதிரி பெரிய ஹீரோக்களுடன் இருக்கும்: ராய் லட்சுமி!!!
1st of July 2014
சென்னை: பரபரப்புக்கு பெயர் போனவர் ராய் லட்சுமி. கிரிக்கெட் வீரர்களுக்கு டின்னர் வைப்பார். அவர்களுடன் ஊர் சுற்றுவார். திடீரென்று பெங்களூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வார். இப்படி பரபரப்பாக இயங்கியவர் இப்போது 10 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மாகி சீரியசாக நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

சினிமாவுக்கு வந்து 10 வருடத்திற்கு மேலாகிவிட்டது. 40 படங்களுக்கு மேல்
நடித்துவிட்டேன். வெற்றி தோல்வி இரண்டையும் பார்த்துவிட்டேன். பத்து
வருடத்தை திரும்பிப் பார்த்தபோது சினிமாவில் இன்னும் தீவிரமாக கவனம்
செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். நான் சரியான சாப்பாட்டு பிரியை ஆனால்
அதை துறந்து கடுமையான டயட்டில் இருந்து எடை குறைத்திருக்கிறேன்.
மலையாளத்தில் 11 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் 9 படங்கள் ஹிட். மோகன்லால், மம்முட்டி, திலீப்புடன் நடித்துவிட்டேன். மம்முட்டியுடன் மட்டும் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது நான்காவது படத்தில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் ரவிச்சந்திரனுடன் ஷருங்காரா என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழில் அரண்மனை, இரும்பு குதிரை படத்தில் நடித்து வருகிறேன்.
அரண்மனையில் எல்லோரையும் கிரங்க வைக்கிற கிளாமரில் நடித்திருக்கிறேன். இரும்பு குதிரையில் ஆக்ஷன் போர்சன். பைக்கெல்லாம் ஓட்டுகிறேன். அடுத்த வருடம் 50வது படத்தை எட்டிப் பிடிப்பேன். எனது 50 வது படம் நிச்சயம் பெரிய படமாக இருக்கும். அஜீத், விஜய், சூர்யா, மாதிரி பெரிய ஹீரோக்களுடன் இருக்கும். அதன் பிறகு இந்திப் படங்களில் நடிப்பேன் என்கிறார் ராய் லட்சுமி.
Comments
Post a Comment