12th of July 2014
சென்னை:மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை வைத்து அஞ்சலி மேனன் இயக்கத்தில் மே மாதம் வெளியான ‘பெங்களூரு டேய்ஸ்’ என்ற படம் வெற்றிகரமாக 50வது நாளை தொட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தை இன்றுவரை கேரள இளைஞர் கூட்டமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது.. அவ்வளவு ஏன் சென்னையில் உள்ள ஈகா தியேட்டரிலும் கூட தொடர்ந்து 50 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு கிட்டத்தட்ட இந்தப்படத்திற்கும் கிடைத்திருக்கிறது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நஸ்ரியா.. இவர் தவிர மரியான்’ பார்வதி மேனன், நித்யா மேனன், இஷா தல்வார் என இன்னும் மூன்று ஹீரோயின்களும் உண்டு. இப்போது இந்தப்படத்தின் வெற்றிதான் பிவிபி நிறுவனத்தை இந்தப்படத்தின் ‘அனைத்திந்திய ரீமேக் உரிமை’யை வாங்கிஇருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment