30th of July 2014
சென்னை:பிறவியிலேயே சின்னக்குழந்தைகளை தாக்கும் நோய்களுள் ஒன்றுதான் தசை சிதைவு நோய்.. 3000 குழந்தைகளில் ஒருவரை இந்த நோய் தாக்குகிறது. இந்த நோய் தாக்கிய குழந்தைகள் நடக்க சக்தியற்று அடிக்கடி கீழே விழுவர். உடனே தானாக எழுந்து நிற்கவும் சிரமப்படுவர்.. மாடிப்படி ஏற முடியாது. சொல்லப்போனால் அவர்களின் வாழ்க்கை சக்கர நாற்காலியிலேயே கழிந்துவிடும் அபாயமும் உண்டு.
ஆனால் அதற்காக இதை இப்படியே விட்டுவிட முடியுமா..? இந்த மாதிரி நோய் இனி வரும் காலங்களில் எந்த ஒரு குழந்தையையும் தாக்கிவிடக்கூடது என்பதற்காகத்தான் ‘ஜீவன் பவுண்டேசன்’ என்கிற அமைப்பு ஒரு விழிப்புணர்வு பேரணியை சென்னையில் நடத்த இருக்கிறது.
மயோரேலி’ எனப்படும் இந்த பேரணி ஆகஸ்ட்-3ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கறையில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த பேரணியில் இந்த தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் திரையுலக நட்சத்திரங்களான விஜய்சேதுபதி, வரலட்சுமி, காயத்ரி ஆகியோரும் கலந்துகொண்டு மக்களுக்கு இந்த நோய் குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் என்கிற எண்ணம் உள்ளவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்போது இந்த விழிப்புணர்வு பேரணியின் நோக்கம் வெற்றியடையும்.. பேரணியின் நோக்கமும் நிறைவேறும். அதற்காகவே தனது பிசியான படப்பிடிப்பு வேலைகளுக்கிடையே நேரம் ஒதுக்கியுள்ளார் விஜய்சேதுபதி.
Comments
Post a Comment