25 லட்சத்தைத் தாண்டிய ‘அஞ்சான்’ லைக்ஸ்!!!

20th of July 2014
சென்னை:வெளியாகி இரண்டே இரண்டு வாரங்கள் தான்..! ஆனால் எட்டியிருப்பதோ 25 லட்சத்தை! சூர்யா நடித்த படங்களிலேயே இது மாபெரும் ஒரு சாதனை!
 
ஆம், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து, ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும் ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள பிரம்மாண்ட படமான ‘அஞ்சான்’ பட டிரைலர் படைத்துள்ள சாதனையை தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறோம்.
 
கடந்த 5-ஆம் தேதி வெளியான ‘அஞ்சான்’ டிரைலர் ஓரிரு நாட்களிலேயே 12 லட்சம் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று சாதனை படைத்தது. இன்றைய நிலவரப்படி ‘அஞ்சான்’ டிரைலரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் மேலும் உயரும் வகையில் ’அஞ்சான்’ டிரைலரை இன்னமும் நிறைய பேர் ‘லைக்’ செய்து வருகிறார்கள். ‘அஞ்சான்’ ஆகஸ்ட் 15 வெளியீடு என்பது எல்லோருக்கும் தெரியும்.

Comments