கடந்த மே மாதம் 23ந் தேதி வெளிவந்தது கோச்சடையான் அரை சதம் அடித்தார்!!!

6th of July 2014
சென்னை:ரஜினி மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கி இருந்தார். சுமார் 120 கோடியில் உருவான இந்தப் படம் 6 மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த மே மாதம் 23ந் தேதி வெளிவந்தது.

தமிழ்நாட்டில் மட்டும் 600 தியேட்டர்களில் ரிலீசானது. தற்போது கோச்சடையான் தமிழ்நாட்டில் 50வது நாளை கடந்து அரை சதம் அடித்திருக்கிறார். சென்னையில் சுமார் 50 தியேட்டர்களில் ரிலீசானது தற்போது 21 தியேட்டர்களில் 50 நாளை கடந்திருக்கிறது. இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் -சுமார் 80 தியேட்டர்களில் 50வது நாளை தொட்டிருக்கிறது. பெரிய அளவில் லாபமோ, பெரிய அளவில் நஷ்டமோ இல்லாமல் பிரேக் ஈவன் ஆகியிருப்பதாக சினிமா வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் செகண்ட் ஷிப்டிங்காக பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில கோடிகள் வசூலிக்கலாம் என்றும், சென்னையில் உள்ள முக்கியமான மால் தியேட்டர்கள் சிலவற்றில் 100 நாள் வரை கோச்சடையான் தாக்கு பிடிப்பார் என்றும் கூறுகிறார்கள்.

இதற்கிடையில் கோச்சடையானை 3டியில் பார்க்க விரும்பும் பள்ளி மாணவர் மாணவிகளுக்கு சலுகை கட்டணத்தை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் முன்பே தகவல் தெரிவித்தால் பள்ளிக்கு அருகில் உள்ள தியேட்டரில் 3டியில் காட்டவும் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

Comments