எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு பதில் அமீர்கான் நடிக்கிறாராம்?!!!

4th of July 2014
சென்னை:ஷங்கர்-ரஜினிகாந்த் கூட்டனியில் சுமார் 150 கோடி செலவில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் ஷங்கர் ரொம்ப ஆர்வமாக உள்ளார். தற்போது அதற்கான திரைக்கதையையும் உருவாக்கி வைத்துள்ள அவர், தற்போது இயக்கி வரும் 'ஐ' பட ரிலீஸிற்குப் பிறகு எந்திரன் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடங்க உள்ளார்.

இந்த நிலையில், எந்திரன் 2 படத்தில் தற்போது ரஜினி, தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு நடிக்க மறுத்துவிடதாக கூறப்படுகிறது. அதனால் ரஜினிக்கு பதில் அமீர்கானை நடிக்க வைக்க முடிவு செய்த ஷங்கர், இது குறித்து அமீர்கானிடமும் பேசிவிட்டதாகவும் தகவல் வெளியாகவில்லை.


பத்திரிகைகளில் பலவிதமாக கூறப்பட்டாலும், தனது ஐ படத்தின் ரிலீஸிற்குப் பிறகே எந்திரன் 2 குறித்த தகவல்களை வெளியிட முடிவு செய்துள்ள ஷங்கர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் எந்திரனை உருவாக்க உள்ளாராம்.

Comments