ஜூலை-18ல் ரிலீஸாகுது தனுஷ் படம்!!!

3rd of July 2014
சென்னை:பாலுமகேந்திரா, கே.வி.ஆனந்த், சந்தோஷ்சிவன் என ஒளிப்பதிவாளர்களாக இருந்து இயக்குனர்களாக மாறுபவர்களின் மீது நம் தமிழ்சினிமா ரொம்பவே மரியாதையையும் நம்பிக்கையையும் வைத்திருக்கிறது. அந்தவகையில் இயக்குனராக உருமாறியிருக்கும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் முதல் படைப்பு தான் ‘வேலையில்லா பட்டதாரி’..
 
தனுஷ், அமலாபால் என க்யூட் காம்பினேஷன்.. திருமணத்திற்குப்பின் வெளியாக இருக்கும் அமலாபாலின் முதல் படம் இதுதான். படிக்காதவன், உத்தமபுத்திரன், மாப்பிள்ளையை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் காமெடி கூட்டணி அமைத்திருக்கின்றார் விவேக்.
 
இசைக்கு அனிருத். ஆக ஒரு கமர்ஷியல் கூட்டணியுடன் பக்காவாக தயாராகி இருக்கிறது ‘வேலையில்லா பட்டதாரி’. இந்தப்படத்தை வரும் ஜூலை-18ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ராஞ்சனா, மரியான் ஆகியவை தனுஷ் ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக கவர்ந்தாலும் தனுஷின் வழக்கமான இந்த கமர்ஷியல் அதிரடியை பார்க்க, அவரது ரசிகர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

Comments