12 வருடம் கழித்து மீண்டும் இணைகின்றனர் அபிஷேக்–அக்சய் குமார்!!!

2nd of July 2014
சென்னை:பாலிவுட்டில் 2010ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஹவுஸ்புல்’. அக்சய்குமார் நடித்த இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான ஹவுஸ்புல்-2 இரண்டுவருடங்கள் கழித்து  2012ல் வெளியானது. அதிலும் அக்சய் தான் ஹீரோ. இதில் அசின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
 
இந்த இரண்டு படங்களையும் இயக்கிய ஷாஜித் கான், இப்போது இதன் மூன்றாம பாகமாக ‘ஹவுஸ்புல்-3’ படத்தை ஆரம்பித்துள்ளார். இதிலும் அக்சய்குமார் தான் ஹீரோ என்றாலும் இவருடன் இணைந்து இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார் அபிஷேக் பச்சன்.
 
இது பாலிவுட்டை பொறுத்தவரை ஒரு விஷேசமான seythi தான். காரணம் 2002ல் வெளியான Haan Maine Bhi Pyaar Kiya படத்தை தொடர்ந்து 12 வருடம் கழித்து மீண்டும் இந்தப்படத்தின் மூலம் இணைகின்றனர் அபிஷேக்பச்சனும் அக்சய்குமாரும். படத்தின் கதாநாயகிகள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Comments