12th of July 2014
சென்னை:இளையராஜா இசை அமைக்கும் 1001-ஆவது படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அரவிந்தசாமி. பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கும் இப்படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த டீஸரில் அரவிந்தசாமி ஏற்றுள்ள பிராமணர் வேடத்தை பார்க்கும்போதே இப்படம் ஏதோ ஒரு வித்தியாசமான கதையை சொல்ல வருகிறது என்பதை நாம் யூகித்துக்கொள்ளலாம்.
ஹர்ஷத் தேவ் தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை மணிகண்டன் ஏற்றுள்ளார். இளையராஜாவின் இசையில் ஒரு பாடலுடன் வெளியாகியுள்ள இப்படத்தின் டீஸர் இளையராஜா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரும் என்பது சந்தேகமில்லை.
Comments
Post a Comment