100-ஆவது நாளில் மான் கராத்தே!!!

12th of July 2014
சென்னை:டிவியிலிந்து சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்தில் புகழின் உச்சத்திற்கு வந்தவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன்
 
நடிப்பில் லேட்டஸ்டாக வந்த படம் ‘மான் கராத்தே’. ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மற்றும் ‘ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ இணைந்து தயாரித்த இப்படத்தை திருக்குமரன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க, அனிருத் இசை அமைத்துள்ள
 
இப்படமும் வெற்றிப் படமாகவே அமைந்துள்ளது. ‘மான் கராத்தே’ வெளியாகி இன்றுடன் 100 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இப்படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Comments