27th of June 2014
சென்னை:பெரிய நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என்ற குழுவில்லாமல் ஒர் பாடல் கடந்த மூன்று நாட்களாய் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.
பாஸு பாஸு எனத் தொடங்கும் இப்பாடல் கேபிள் சங்கர் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் “தொட்டால் தொடரும்” என்ற படத்தின் ப்ரொமோ பாடல்.
இணையமெங்கும் சினிமா துறையினராலும், பயனாளிகளாலும் அதிகப்படியாய் ஷேர் செய்யப்படும் பாடலாகி கொண்டிருப்பதே இப்பாடலின் வெற்றிக்கு சாட்சி.
இப்பாடலைப் வெளியிடுவதற்கு முன் ஜி.வி.ப்ரகாஷ், பார்த்திபன், சி.வி.குமார், விஜய் சேதுபதி, தனஞ்செயன், மனுஷ்ய புத்திரன், சாருநிவேதிதா போன்ற பிரபலங்களிடம் போட்டுக் காட்டி அவர்களின் கருத்துக்களையும் பெற்றிருக்கிறார்கள்.
பாடல் வெளியான பின் பல சினிமா இயக்குனர்கள் பிரபலங்களின் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. க்ளாஸிக்கல் ஜாஸ் இசையில் பக்கா லோக்கல் பாடல். அருமையான வரிகள் கேட்ட அடுத்த நிமிஷம் முணுமுணுக்காமல் இருக்க மாட்டீர்கள்.
இப்பாடலை இயக்குனர் கேபிள் சங்கரும், அவரது உதவியாளர் கார்க்கி பவாவும் எழுத, இசையமைத்திருப்பவர் பி.சி.ஷிவன். பாடியவர் அந்தோணிதாசன்.
Comments
Post a Comment