Yevan Movie Stills!!! எவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் துரைமுருகன்!!!

10th of June 2014
சென்னை::Tags : Yevan New Movie Photos, Yevan Latest Movie Gallery, Yevan Unseen Movie Pictures, Yevan Film Latest images, Yevan Movie Hot Stills, Yevan Movie New Pics..எவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் துரைமுருகன்!!!






 

























 புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் படம் 'எவன்'.வழக்கமாக காதலுனும் காதலியும் சேருவதற்காகத்தான்
பெரிய போராட்டமே நடக்கும், ஆனால் இங்கே அம்மாவும் மகனும் சேருவதற்கு காதலி படும் பாடே இந்த படத்தோட கதை களம். இந்த படம் காதலிப்பவர்களுக்கும், அம்மாவை பிடிக்கிற எல்லோருக்கும், ஊதாரி தனமாக ஊரை சுற்றுபவர்களுக்கும் என இந்த மூன்று வகையினருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குநர் கே.எம்.துரைமுருகன்.

எவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் துரைமுருகன், தயா, கருப்பசாமி குத்தகைதாரர், கோலி சோடா போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் நாயகனாக திலீபன் புகழேந்தி நடிக்கிறார். இவர் ஒரு இருசக்கர வாகன விளையாட்டு வீரர். படத்தில் வரும் ஒரு சேசிங் காட்சியில் மிகவும் அபாயகரமான ஸ்டண்ட்களை எந்த வித டூப்பும் இல்லாமல் தானாகவே நடித்து கொடுத்துள்ளார். இந்த ஸ்டண்ட் காட்சி வெகுவாக பேசப்படும். நாயகியாக மானே நடித்துள்ளார்.

சன்லைட் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.சசிதரன் இசையமைக்கிறார்.

இப்படத்திற்காக சண்டைக்காட்சி ஒன்றை படமாக்குவதற்காக திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு காட்டுக்குள் படக்குழுவினர் சமீபத்தில் சென்றனர். அங்கே இருக்கும் பழங்குடி மக்கள் காட்டுக்குள் ராட்சத தேன் கூடுகள் இருப்பதாகவும், உள்ளே செல்வது ஆபத்து என்றும் கூறினர். சமீபத்தில் கலெக்டர் உதவியாளர்களுடன் காட்டை சுற்றிப் பார்க்க உள்ளே சென்ற போது தேனீக்கள் அவர்களை கொட்டியதால், கலெக்டர் சுற்றுப் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டார் என்றும் கூறினர். இதைக் கேட்ட படக்குழுவினர் என்ன செய்வது என்று திகைத்து நிற்க, பிறகு அங்கிருந்த பழங்குடி இணத்தைச் சேர்ந்த ஒருவர், "நீங்கள் உள்ளே செல்லும் போது பெண்கள் பூ வைக்க கூடாது, யாரும் செண்ட் போன்ற வாசனை பொருட்களை பயன்படுத்த கூடாது, புகை பிடிக்க கூடாது, வேட்டு சத்தம் ஏதும் போடக் கூடாது, என்று யோசனை கூற அதன்படி படக்குழுவினர் காட்டுக்குள் சென்றனர்.

அப்போது செட் உதவியாளர் ஒருவர் மறைவாக சென்று புகைபிடிக்க தேன் கூட்டிலிருந்து பறந்து வந்த ராட்சத தேனீக்கள் படக்குழுவினரை கொட்டியது. மூன்று பேரை மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு பாதிப்பு அதிகமாகிவிட, அத்துடன் படப்பிடிப்பை அன்று ரத்து செய்து விட்டனர். மீண்டும் மறுநாள் அதே இடத்திற்கு படு எச்சரிக்கையாக சென்று அக்காட்சியை மீண்டும் படமாக்கியுள்ளனர்.
 

Comments