13th of June 2014
சென்னை:காஷ்மீரில் ஷூட்டிங் நடத்திய தமிழ் பட குழுவினர் மீது தாக்குதல் நடந்தது.அஜ்மல், ராதிகா ஆப்தே நடிக்கும் படம் ‘வெற்றிச் செல்வன். இப்பட இயக்குனர் ருத்ரன் கூறியது:மனநல காப்பகத்தில் இருப்பவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பின்னணியாக கொண்ட திரில்லான கதை.

அஜ்மல், மனோ, ஷெரீப், ராதிகா ஆப்தே நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் காஷ்மீரில் பெஹல்காம், குல்மார்க், ஸ்ரீநகரில் நடந்தது. பெஹல்காமில் ராதிகா ஆப்தே நடித்த ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இந்தியாகாரங்க இங்க வந்து ஏன் ஷூட்டிங் நடத்றீங்க என்று கோபமாக கத்தியபடி தாக்கத் தொடங்கினார்.
அப்போது அப்பகுதியில் இருந்த சீக்கியர்கள் சிலர் எங்களை காப்பாற்றி தங்கள் காரில் அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்திய எல்லைப் பகுதியில்தான் ஷூட்டிங் நடத்தினோம். ஆனால் அங்கிருப்பவர்கள் பாகிஸ்தானியர்கள்போல் பேசி தாக்க முயன்றார்கள். இது அதிர்ச்சி அளித்தது. சிரமங்களுக்கிடையே இப்படத்தின் ஷூட்டிங் நடத்தி முடித்து தணிக்கையும் ஆகி விட்டது. அவர்களும் யு சான்றிதழ் தர மறுத்து யு/ஏ சான்றுதான் கொடுத்தார்கள். எம்.நாகராஜன், கே.சுரேஷ்பாபு தயாரிப்பு. மணிசர்மா இசை.
Comments
Post a Comment