Vaaliba Raja Movie Audio Launch Photos!!! சந்தானம் இல்லாமல் நடந்த ‘வாலிபராஜா’ ஆடியோ வெளியீட்டு விழா!!!

27th of June 2014
சென்னை:Tags : Vaaliba Raja Audio Launch images, Vaaliba Raja Movie Songs Release Pictures, Vaaliba Raja Audio Launch Photos, Kamal Haasan at Vaaliba Raja Movie Songs CD Release Gallery, Vaaliba Raja Songs Launch Stills..
 
கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக் கூட்டணியான சந்தானம், சேது, விசாகா சிங் மற்றும் பவர் ஸ்டார் ஆகியோர் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘வலிபராஜா’.

இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத் நடிக்கிறார். இந்தப் படத்தை கே.வி.ஆனந்திடம் அசிஸ்டென்டாக பணிபுரிந்த சாய் கோகுல் ராம்நாத் இயக்கி வருகிறார். படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ரதன். இந்தப் படத்தில் ’வாலிபராஜா’ எனும் டைட்டில் ரோலில் மனநல மருத்துவராக நடிக்கிறார் சந்தானம். நேற்று இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேவி தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல், இயக்குனர் கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால் படத்தின் நாயகனான சந்தானம் மட்டும் இந்த விழாவில் மிஸ்ஸிங். காரணம் என்ன என்று விசாரித்ததில் சந்தானம் லிங்கா படபிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஆந்திராவில் உள்ளாராம். தற்போது லிங்காவில் சந்தானம் ரஜினியுடன் சந்தானம் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கி கொண்டிருக்கிறார்களாம்.

அதனால தன்னால் ரஜினி படத்தின் படப்பிடிப்பு தடைபட கூடாது என நினைத்த சந்தானம் வாலிபராஜா ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆந்திரா சென்றுவிட்டாராம். அதேசமயம் தன்னை எதிர்பார்க்காமல் வாலிபராஜா விழாவையும் குறித்த நாளில் நடத்தி விடுங்கள் என்று சொல்லிவிட்டாராம் சந்தானம்.



































Comments