Salim Audio Launch Photos!!! இசையமைக்க இனி நேரம் இல்லை” – ‘நடிகர்’ விஜய் ஆண்டனி ஓபன் டாக்!!!

6th of June 2014
சென்னை:தான் நடிக்கும் இரண்டாவது படமான ‘சலீம்’ இசை வெளியீட்டு விழாவை இன்று மிகச்சிறப்பாக நடத்திவிட்டார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. பாரதிராவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய நிர்மல்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அக்ஷா பார்தசானி மற்றும் அஸ்மிதா இருவரும் நடித்திருக்கிறார்கள்.
 
இந்தப்படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் விஜய் ஆண்டனி பேசியபொழுது, “இது ‘நான்’ படத்தின் இரண்டாம் பாகம் இல்லை.. அதுபோன்ற சாயல் தெரிவதால் அப்படி தோன்றியிருக்கலாம்.. நடிப்பதற்கே நேரம் சரியாக போய்விடுவதால் இனி வெளிப்படங்களுக்கு இசையமைக்க முடியாத சூழலில் உள்ளேன்..
 
அவ்வளவு ஏன் எனது அடுத்த படமான ‘இந்தியா-பாகிஸ்தான்’ படத்திற்கு கூட இன்னொருவர்தான் இசையமைக்கிறார். காரணம் நடிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தயாரிப்பு தரப்பில் என் மனைவி செயல்படுவதால் எனக்கு எந்த டென்ஷனும் இன்றி ‘ஹாயாக’ இருக்கமுடிகிறது.
 
ரம்ஜான் பண்டிகை வரும் ஜூலை-27ல் வருவதால் ‘சலீம்’ படத்தை ஜூலை-25ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்” என்று கூறினார் விஜய் ஆண்டனி. இந்தப்படத்தை ஸ்டுடியோ 9 மற்றும் ஸ்ரீ ஸ்கிரீன் நிறுவனம் இரண்டும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து தயாரித்துள்ளன..
 

Comments