எத்தனையோ மாளவிகா இப்போது வந்துவிட்டார்கள், இதில் எந்த மாளவிகாவை நீங்கள் சொல்கிறீர்கள் எனக் கேட்பது கேட்கிறது. 'அட நம்ம கருப்புதான்: மீண்டும்!!! (photos!
30th of June 2014
சென்னை:எத்தனையோ மாளவிகா இப்போது வந்துவிட்டார்கள், இதில் எந்த மாளவிகாவை நீங்கள் சொல்கிறீர்கள் எனக் கேட்பது கேட்கிறது. 'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு....' எனப் பாடி ஆடி கவர்ந்த மாளவிகாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படியே மறந்திருந்தாலும் அந்தப் பாடலை மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பாடல் வந்த பிறகுதான் கருப்பாக இருப்பவர்கள் கொஞ்சம் காலரை நிமிர்த்தி விட்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

அஜித்
ஜோடியாக 'உன்னைத் தேடி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர்தான் மாளவிகா.
தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி கதாநாயகியாக வரமுடியவில்லை.
இருந்தாலும் பல ரசிகர்களைக் கவர்ந்த ஒரு நாயகியாக இருந்தார். அதன் பின்
திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று நடிப்பதிலிருந்தே விலகினார்.
தற்போது மீண்டும் நடிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம்.
அதைத் தொடர்ந்து கோலிவுட்டில் உள்ள நண்பர்களுக்கு நடிக்கும் முடிவை தெரிவித்திருக்கிறாராம். பழைய நண்பர்கள் தனக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறார். மாளவிகா அனைவருடனும் எளிமையாகப் பழகும் குணம் கொண்டவர் என்பதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சுலபமாகவே இருக்கும் என்கிறார்கள்.
“திருட்டுப் பயலே, சந்திரமுகி, நான் அவனில்லை,” உட்பட சில தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் மாளவிகா நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த ஐந்தாறு படங்களில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார். நாயகியாக அவர் நடித்த கடைசி படம் 2009ல் வெளிவந்த 'கட்டு விரியன்'. எப்படியும் அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்கத்தான் நம் இயக்குனர்கள் அழைப்பார்கள். இங்குதான் திருமணம் ஆனாலே அந்த கேரக்டர்களில் நடிக்கத்தான் பொருத்தம் என முடிவெடுத்து விடுகிறார்கள். ஆனால், மலையாளம், இந்தியில் திருமணம் ஆனாலும் நாயகியாக நடித்து வருகிறார்கள். மாளவிகாவுக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்...
Comments
Post a Comment