6th of June 2014
சென்னை:Tags : Pagadai Pagadai Audio Release Gallery, Pagadai Pagadai Songs Launch Event Stills, Pagadai Pagadai Movie Audio Release Photos, Pagadai Pagadai Audio CD Launch Pictures, Pagadai Pagadai Audio Release Function images..பகடை பகடை என்ற படத்தில் அரசியல்வாதியாக கோவை சரளா!!!கோவை சரளா..
மனோரமா காமெடி வேடத்தில் இருந்து அம்மா வேடங்களுக்கு ப்ரமோஷன்
ஆனபோது, கவுண்டமணி- செந்திலின் காமெடி கூட்டணியில் இணைந்தவர் கோவை சரளா.
கவுண்டமணியும் கோவையைச்சேர்ந்தவர் என்பதால் சரளாவுக்கு தான் நடித்த
படங்களில் தொடர்ந்து சான்ஸ் கொடுத்து வந்தார். அப்போது மனோரமாவின் இடம்
காலியாக இருந்ததால் அந்த இடத்தை எளிதில் கைப்பற்றிய கோவை சரளா,
நீண்டகாலமாக சினிமாவில் தன்னை தக்கவைத்துக்கொண்டும் வருகிறார்.
சிலகாலம்
அவரது மார்க்கெட் தேக்கநிலை கண்டபோது, லாரன்ஸ் இயக்கத்தில் அவர் நடித்த
காஞ்சனா படம் கோவை சரளாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனால்,
காமெடி கலந்த அம்மா வேடங்களுக்கு தமிழ் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும்
அவரை புக் பண்ணினார்கள். அதனால் அப்போது தொடங்கிய பரபரப்போடு இன்னும்
பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சரளா.
அந்தவகையில்,
தற்போது பகடை பகடை என்ற படத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.
இதுவரை இந்த மாதிரி வேடங்களில் நடித்திராத கோவை சரளா தனக்கே உரிய பாணியில்
நக்கல் நய்யாண்டி என்று கலந்து கட்டியடித்திருக்கிறாராம். அரசியல்வாதியாக
நடித்தாலும், சில அரசியல்வாதிகள் போன்று மிமிக்ரி செய்வது போன்று காமெடி
செய்திருக்கிறாராம்.
அதனால், காஞ்சனாவிற்கு பிறகு இந்த படம் தனக்கு அடுத்த திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறாராம் கோவை சரளா.
Comments
Post a Comment