Naan Than Bala Movie New Stills!!! கடவுள் இல்லைன்னு நான் சொன்னதே கிடையாது: விவேக் பேட்டி!!!

4th of June 2014
சென்னை:Tags : Naan Than Bala New Movie Photos, Naan Than Bala Latest Movie Gallery, Naan Than Bala Movie Pictures, Naan Than Bala Film Latest images, Naan Than Bala Movie Hot Stills, Naan Than Bala Movie New Pics..கடந்த 25 வருடங்களாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த விவேக், முதன்முறையாக கதாநாயகனாக, குணச்சித்திரத்தில் முத்திரை பதித்திருக்கும்..






































கடந்த 25 வருடங்களாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த விவேக், முதன்முறையாக கதாநாயகனாக, குணச்சித்திரத்தில் முத்திரை பதித்திருக்கும் படம் ‘நான்தான் பாலா’. இப்படத்தை இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்.கண்ணன் இயக்குகிறார். விவேக் ஜோடியாக ஸ்வேதா என்ற புதுமுகம் நடிக்கிறார். பூச்சி என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் ராஜூ என்பவர் முக்கிய வேடமேற்றிருக்கிறார். மேலும், இப்படத்தில் தென்னவன், மயில்சாமி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசையமைப்பாளராக வெங்கட் க்ரிஷி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவருடைய இசையில் இந்த படத்தில் பிராமண சமூகத்தில் நடைபெறும் திருமணத்தில் பரிமாறப்படும் விருந்துகளை பற்றிய பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என படக்குழுவினர் கூறுகின்றனர். இப்படம் குறித்து நடிகர் விவேக் மாலைமலர்.காமிற்கு அளித்த பேட்டியில்,

நான்தான் பாலா ஒரு நேர்மையான, ஏழை பிராமணனின் கதை. கும்பகோணத்தில் பெருமாள் கோவில் பூசாரியான பாலா, வயதான தனது தாய், தந்தைக்காக அமெரிக்காவில் கிடைக்கும் பெரிய வேலையையும், திருமணத்தையும் தவிர்த்து வாழ்ந்து வருகிறான். இதேபோல், காஞ்சிபுரத்தில் வசிக்கும் சௌராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்த நாயகி வைசாலியை காதலிக்கிறார். இவர்களுடைய காதலை புரிந்துகொண்ட, கூலிப்படையைச் சேர்ந்த பூச்சி இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க நினைக்கிறான். இவர்களுக்கு திருமணம் நடக்கப் போகும் தருவாயில் பூச்சி பற்றிய முழு விவரமும் பாலாவுக்கு தெரியவருகிறது. இறுதியில் துளசி தீர்த்தமா? ரத்தமா? என்பதை கிளைமாக்ஸாக உருவாக்கியுள்ளோம்.

இந்த கதையை கேட்ட இயக்குனர் பாலா, இந்த கதாபாத்திரத்திற்கு விவேக்தான் சரியாக பொருந்துவார் என்று இயக்குனர் கண்ணனிடம் கூற, அவரும் என்னிடம் வந்து கதையை கூறினார். இந்த கதையை கேட்ட நான் இரண்டரை வருஷமாக இதில் நடிக்கமால் மறுத்து வந்தேன். ஆனால், இப்போது ரசிகர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற பக்குவத்திற்கு வந்துள்ளனர். ஆகையால், இதுதான் சரியான தருணம் என்று நடித்துள்ளேன். எந்த காமெடியனுக்கும் இந்த மாதிரி கதாபாத்திரம் கிடைப்பது அரிது.

இயக்குனர் கண்ணன் தனது குருநாதர் பாலா மீதுள்ள பக்தியினாலேயே இப்படத்திற்கு ‘நான்தான் பாலா’ என்ற பெயரை வைத்திருக்கிறார். என்னுடைய படங்களில் நான் எப்போதும் கடவுள் இல்லை என்று சொன்னது கிடையாது. நானும் கடவுளை கும்பிடுகிறவன்தான். கடவுள் பெயரால் மக்களை ஏமாறுவதைத்தான் வேண்டாம் என்று என்னுடைய படங்களில் நகைச்சுவையாக பதிவு செய்திருப்பேன். மற்றபடி கடவுள் நம்பிக்கை எல்லாம் எனக்கும் உண்டு.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே சௌராஷ்டிரா சமூகத்தை பற்றியும், அந்த மொழியையும் இந்த படத்தில் முதன்முதலாக பதிவு செய்துள்ளோம். சௌராஷ்டிரா மொழி பேசி திறம்பட நடித்துள்ளார் நாயகி ஸ்வேதா. இவ்வளவு உணர்வுப்பூர்வமான கதையோட்டத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் முடியும் என்பதில் மயில்சாமியும், செல் முருகனும் வென்றிருக்கிறார்கள். அழகிய மாணவனின் ஒளிப்பதிவு இந்த தரமான கதையை தூக்கி நிறுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments