Manal Nagaram Movie Stills!!! முழுக்க முழுக்க துபாயில் படமான 'மணல் நகரம்!!!

20th of June 2014
சென்னை:Tags : Manal Nagaram New Movie Photos, Manal Nagaram Latest Movie Gallery, Manal Nagaram Unseen Movie Pictures, Manal Nagaram Film Latest images, Manal Nagaram Movie Hot Stills, Manal Nagaram Movie New Pics..
 
பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்குப் போன தமிழ் சினிமா, தற்போது படம் முழுவதையும் வெளிநாடுகளில் படமாக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க துபாயில் படமாகியுள்ள படம் தான் 'மணல் நகரம்'.

'ஒருதலை ராகம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சங்கர், இப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் பல படங்களை இயக்கியுள்ள 'ஒருதலை ராகம்' சங்கர் இயக்கும் முதல் தமிழ்ப் படம் இது தான்.


டி..ஜே.எம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த் குமார் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக பிரஜின் நடிக்க நாயகியாக தனிஷ்கா நடிக்கிரார். மற்றொரு நாயகியாக வருணா ஷெட்டி நடிக்கிறார். இவர் துபாயில் பிறந்து வளர்ந்தவர்.

இப்படம் குறித்து இயக்குநர் சங்கர் கூறுகையில், "துபாயில் மூன்று நண்பர்கள் குடும்ப வறுமையால் இந்தியாவிலிருந்து பிழைப்புக்காகச் சென்று வேலைபார்த்து வருகிறார்கள். ஒரே அறையில் தங்கி வசிக்கிறார்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பேதம் மறந்து ஒன்றாக இருக்கிறார்கள்.

துபாயில் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அவர்கள் அதிலிருந்து மீள்வதற்குப்  படுகிற போராட்டம் தான் கதை.

படத்தில் நட்பு, காதல் எல்லாம் உள்ளன. துபாயில் ஒரு பெண்ணைக் காதலிப்பதால் காதலர் இருவர் சந்திக்கும் பிரச்சினைகளும் காட்டப்பட்டுள்ளன.

நம் நாட்டைப் போன்றதல்ல துபாயின் சட்ட திட்டங்கள். இந்தியா போல அங்கு எளிதில் பெயிலில் வரமுடியாது. ஏதாவது வழக்கென்றால் அரபி மொழி தெரிந்த வழக்கறிஞரை வைத்துதான் வாதாட முடியும். அதனால் தகவல் தொடர்பு பிரச்சினை இருக்கும். வழக்கறிஞர் கட்டணம் மிக அதிகம். இதுபோல பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஏதாவது பிரச்சினை வழக்கு என்று போய்விட்டால் சமாளிப்பது வெளிவருவது சாதாரணவிஷயமல்ல. அதையும் சொல்கிறது படம்.

துபாயில் சட்டம் கடுமையாக இருக்கும். படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குவது கூட முன்பு போல இப்போது இல்லை. விதிகளை கடுமையாக்கி இருக்கிறார்கள். சிலர் அங்கு படமெடுத்துவிட்டு வெளியே போய் அதை தவறாக சித்தரித்ததுண்டு. தவறான காட்சிகளுக்கு நாட்டை பயன்படுத்தி இருப்பது கண்டு விதிகள் கடுமையாக்கி இருக்கிறார்கள். அதனால் அங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் எங்கு எடுக்கப் போகிறோம் என்ன காட்சி என்று சொல்ல வேண்டும். படத்தின் முழு கதையையும். அரபியில் மொழிபெயர்த்துக்  கொடுக்க வேண்டும் அதைப் படித்து நம்மை படப்பிடிப்புக்குஅனுமதிப்பது பற்றி அந்த மீடியா ஆய்வுக் குழுதான் முடிவு செய்யும்." என்றார்.

















Comments