Kadhal 2014 Movie Audio Launch Photos!!! ஹரீஷ்-நேகா நடிக்கும் 'காதல் 2014'!!!

18th of June 2014.
சென்னை:Tags : Kadhal 2014 Audio Release Gallery, Kadhal 2014 Songs Launch Event Stills, Kadhal 2014 Movie Audio Release Photos, Kadhal 2014 Audio CD Launch Pictures, Kadhal 2014 Audio Release Function images.
 
சரவணா பிலிம் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம்சங்கர், ஆர்.எல்.ஏசுதாஸ்,ஆர்.ஒய்.சஜீத் ஆகியொர் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு 'காதல்2014' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் 'முத்துக்கு முத்தாக', 'கோரிப்பாளையம்', 'மாத்தியோசி' படங்களில் நடித்த ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமான மணிகண்டன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மற்றும் அப்புக்குட்டி, பசங்க சிவகுமார், வேல்முருகன், கம்பம் மீனா, ஷர்மிளா, அழகப்பன், ராஜபாண்டி, ஷிவாணி, சேலம் சின்ன கருப்பு ஆகியோர் நடிக்கிறார்கள்.


ரித்தீஷ் கண்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பைசல் இசையமைக்கிறார். விவேகா, லலிதானந்த், சுகந்தன் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி  சுகந்தன் இயக்குகிறார்.  இவர் சேரனிடம் 'ஆட்டோகிராப்' படம் வரை உதவியாளராக பணியாற்றியவர். அத்துடன் பாலசேகரன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குநர் சுகந்தன் கூறுகையில், "காதல் என்பது புனிதமானது தான்.. ஒவ்வொரு கலாகட்டதிலும் மாறி வந்த காதல் இன்றைய காலகட்டத்தில் அதாவது 2014ஆம் ஆண்டில் உருவாகும் காதல் எப்படிப்பட்டது மாறி வந்த காதலால் இன்றைய காதலர்கள் சந்திக்கு நல்லது கெட்டது பற்றி இந்த படத்தில் கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம்.

படபிடிப்பு முழுவது சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

காதல் 2014 -  படம் காலம் கடந்து பேசப்படும் படமாக இருக்கும்." என்று தெரிவித்தார்.

....

















Comments