Director Ramanarayanan Death Condolences Photos!!! ராம.நாராயணனின் உடல் இன்று தகனம் - சினிமா படப்பிடிப்புகள் ரத்து!!!

24th of June 2014
சென்னை: Tags : Director Ramanarayanan Death Condolences images, Director Ramanarayanan Death Condolences Gallery, Director Ramanarayanan Death Condolences Pictures, Stars at Director Ramanarayanan Death Condolences Meet Photos, Director Ramanarayanan Death Condolences Stills..




 































பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ராம.நாராயணன், சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் நெற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் நேற்று நள்ளிரவு vimaanam மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது சென்னை,மகாலிங்கபுரத்தில் உள்ள  அவரது இல்லத்தில் பொதுமக்கள்  அஞ்சலி செலுத்துவதற்காக  உடல் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்குகள் நடந்தபின், இன்று பிற்பகல் 2-30 மணி அளவில் ராம நாராயணன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

ராம.நாராயணன் மறைவையொட்டி, சென்னையில் இன்று சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரைப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் நடைபெறாது என்றும், இதற்கு திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒத்துழைப்பு தருகின்றன என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது.

மரணம் அடைந்த டைரக்டர் ராம.நாராயணனுக்கு வயது 66. அவருடைய மனைவி பெயர், ராதா. இவர் 3 வருடங்களுக்கு முன்பே மரணம் அடைந்து விட்டார். இவர்களுக்கு முரளி என்ற மகனும், அன்பு மீனாள், உமா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். ராம நாராயணன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராட்டி, குஜராத்தி, போஜ்புரி, மலாய் ஆகிய மொழிகளில் 128 படங்களை டைரக்டு செய்திருந்தார். அவர் டைரக்டு செய்த முதல் படம், ‘சுமை.’ கடைசி படம், ‘ஆர்யா சூர்யா.’

தி.மு.க. ஆட்சி காலத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். தமிழக அரசின் இயல்-இசை-நாடக மன்ற தலைவராகவும் இருந்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

Comments