Dhanush at Filmfare Awards Photo Gallery!!! அஜீத் கழட்டியதை மாட்டிக்கொண்ட தனுஷ்!!!!

20th of June 2014
சென்னை:சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் சரி, எங்கு வந்தாலும் கோட் சூட்டுடன் தான் வருவார் அஜீத். பெரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்றாலும் சரி, மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று ஓட்டுப் போடுவதென்றாலும் சரி, அஜீத் அணிந்து வரும் ஆடை கோட் சுட்டாகத்தான் இருக்கும்.

இந்த கோட் சூட் வகைகளை தான் நடிக்கும் படத்திலும் அஜீத் பின்பற்றி வந்ததால், பத்திரிகை விமர்சனங்களில் இது பெரிதாக பேசப்பட்டது. "அஜீத் எப்போது கோட் சூட் இல்லாமல் நடிக்கிறாரோ, அப்போது தான் அவர் படமும் ஓடும்" என்று நிருபர்கள் எழுதினர். இதனைத் தொடர்ந்து அஜீத், தனது கோட் சூட் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்தார். தற்போது பட்டு வேஷ்டி பட்டு சட்டை என சராசியான ஆடைகக்கு மாறிவிட்டார் அஜீத்.


அஜீத் மாறிவிட்டார் சரி, அவருடைய பாணியை தற்போது பின்பற்ற தொடங்கிவிட்டார் தனுஷ். இந்தியில் வெற்றி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும், கோட் சூட் ஆடைகளில் தான் பங்கேற்கிறார். பாலிவுட் என்பதால் இப்படியோ, என்று நினைத்தால் சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் கோட் சூட்டோடு தான் வந்தார் தனுஷ்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தனுஷ், கோட் சூட்டில் வந்தார். மேலும், 6 மணி நிகழ்ச்சிக்கு இரவு 9 மணிக்கு மேல் தனுஷ் வந்ததால், அங்கிருந்த தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோபத்துடன் சென்றுவிட்டார்கள்.

பிறகு இருந்த ஒன்று இரண்டு புகைப்படக் கலைஞர்களை வைத்து பிரஸ் மீட்டை நடத்தியுள்ளார்கள்.

Comments