Chittu Kuruvi Album Launch Photos!!! பாலியல் வன்முறைக்கு எதிராக உருவாகியுள்ள ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்!!!
3rd of June 2014
மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. அதுபோல தற்போது இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள், நம் பெண்களையும் அந்த சிட்டுக்குருவிகளை போல இல்லாமல் செய்துவிடுமோ என்கிற அச்சம் பெரும்பாலானோருக்கு ஏற்பட்டது டெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தின்போதுதான். அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு முறையும் பாலியல் வன்முறையால் பலியாவது சம்பந்தப்பட்ட பெண் மட்டுமல்ல, ஒரு தலைமுறையே பாதிக்கப்படுகிறது என்பதை மனதளவில் பதிய வைக்க வேண்டும் என முடிவு செய்த இயக்குனர் விஜய்.ஆர்.ஆர் தற்போது அதை ‘சிட்டுக்குருவி என்கிற பெயரில் ஆல்பமாக இயக்கியுள்ளார்.
பாலியல் வன்முறையை தடுப்பதற்கு சட்டம் மட்டும் போதாது. மனவியல் ரீதியாக ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளேன்” என்கிறார் விஜய்.ஆர்.ஆர்.. இவர் ஏற்கனவே பூமி மாசுபட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி’, மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி’, என்று இரண்டு படைப்புகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:Tags : Chittu Kuruvi Album Release Gallery, Chittu Kuruvi Album Launch Event Stills, Chittu Kuruvi Album Release Photos, Chittu Kuruvi Album CD Launch Pictures, Chittu Kuruvi Album Release Function images..பாலியல் வன்முறைக்கு எதிராக உருவாகியுள்ள ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்!!!..
மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. அதுபோல தற்போது இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள், நம் பெண்களையும் அந்த சிட்டுக்குருவிகளை போல இல்லாமல் செய்துவிடுமோ என்கிற அச்சம் பெரும்பாலானோருக்கு ஏற்பட்டது டெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தின்போதுதான். அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு முறையும் பாலியல் வன்முறையால் பலியாவது சம்பந்தப்பட்ட பெண் மட்டுமல்ல, ஒரு தலைமுறையே பாதிக்கப்படுகிறது என்பதை மனதளவில் பதிய வைக்க வேண்டும் என முடிவு செய்த இயக்குனர் விஜய்.ஆர்.ஆர் தற்போது அதை ‘சிட்டுக்குருவி என்கிற பெயரில் ஆல்பமாக இயக்கியுள்ளார்.
பாலியல் வன்முறையை தடுப்பதற்கு சட்டம் மட்டும் போதாது. மனவியல் ரீதியாக ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளேன்” என்கிறார் விஜய்.ஆர்.ஆர்.. இவர் ஏற்கனவே பூமி மாசுபட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி’, மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி’, என்று இரண்டு படைப்புகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment