இன்றுமுதல் பாலிவுட்டில் ‘ஹவுஸ்ஃபுல்’லாகும்: ஹொலிடே (‘துப்பாக்கி)’!!!



6th of June 2014
சென்னை:அமீர்கானைப்போல மிகவும் நம்பிக்கையுடன், நகத்தை கடிக்காமலேயே மகிழ்ச்சியுடன் காத்துக்கொண்டிருக்கிறார் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய்குமார். காரணம் அவர் நடித்துள்ள ‘ஹவுஸ்ஃபுல்’ படம் இன்று வெளியாவதுதான்.
 
இந்தப்படத்தின் ஒரிஜினல், தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துப்பாக்கி’ என்பதும் அதை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸே இதையும் இயக்கியுள்ளார் என்பதும்தான் மகிழ்ச்சிக்கு காரணம்.
 
அந்தவகையில் படத்தின் வெற்றி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்பதால் சோனாக்ஷி சின்ஹா மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோருடன் ஜாலியாக படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் அக்ஷய் குமார்.
 
அவரது தற்போதைய எதிர்பார்ப்பெல்லாம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினியின் மூலம் ஆமிர்கானுக்கு மிகப்பெரிய பிரேக் கிடைத்ததுபோல தனக்கும் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரவேண்டும் என்பதுதான். அவரது நம்பிக்கை வீண்போகாது என்றே தோன்றுகிறது..

Comments