14th of June 2014
சென்னை:நடிகைகள் திருமணம் செய்துகொள்வதும் அதன்பிறகு கொஞ்சநாள் கழித்து நடிக்கவருவதும் சினிமாவில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். அதிலும் மலையாள சினிமாவைப் பொறுத்தவரை திருமணமானாலும் கூட அவர்கள் தொடர்ந்து கதாநாயகிகளாக நடிக்க தடையேதுமில்லை.
அந்தவகையில் காவ்யா மாதவன், மம்தா மோகன்தாஸ் இருவரைத் தொடர்ந்து நடிகை மஞ்சு வாரியரும் நடிக்கவந்தார். அவர் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ என்ற படம் வெளியானது. அது வெற்றிகரமாக ஓடுவதுடன் மஞ்சுவின் நடிப்பிற்கு பலரிடமிருந்தும் பாராட்டுக்களை பெற்றுத்தந்துள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் இருந்து அப்படி ஒரு பாராட்டு மஞ்சு வாரியருக்கு சென்றிருக்கிறது. அது வேறு யாருமல்ல சரத்குமாரும் ராதிகாவும் தான். சமீபத்தில் படம் பார்த்துவிட்டு சரத்குமார் அனுப்பிய ட்வீட்டில் “ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்களை இந்தப்படத்தில் இருந்து கற்றுக்கொள்ளமுடியும்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment