27th of June 2014
சென்னை:தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அந்தால ராட்சஸி’ படத்திற்கு இசையமைத்த ரதன் தான் தான் ‘வாலிபராஜா’ படத்துக்கும் இசையமைத்துள்ளார். அதற்காக இவரை ஆந்திராக்காரர் என நினைத்துவிடாதீர்கள். பக்கா சென்னைக்காரர் தான். வாலிபராஜா இசைவெளியீட்டு விழாவின் நேற்றைய நாயகன் அவர்தான்.
அவர் பேசும்போது தன்னுடைய பெற்றோர், தான் முன்னுக்கு வருவதில் உறுதுணையாக இருந்ததை குறிப்பிட்டு மனம் நெகிழ்ந்தார். அதேஎபோல வளரும் கலைஞனான தனது படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கமல் கலந்துகொண்டதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
விழாவில் கமல் பேசும்போது, மற்ற அனைத்து விஷயங்களையும் பேசிவிட்டு இறுதியாக இசையமைப்பாளர் ரதனிடம் வந்தார். அவரின் அருகில் அமர்ந்திருந்த ரதனை நேரடியாக பாராட்டிய கமல், “உங்கள் பெற்றோர் இங்கே கீழே தானே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் காதுகள் மட்டும் நான் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அதை பார்க்க முடியாதபடி ஆனந்தக்கண்ணீர் அவர்களின் கண்களை மறைத்திருக்கும்.. உண்மைதானே..” என்று கேட்க ரதனின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்.
Comments
Post a Comment