3rd of June 2014
சென்னை:காமெடி, ஆக்ஷன், இவற்றுடன் போனால் போகிறதென்று கொஞ்சமே கொஞ்சம் செண்ட்மெண்ட் என அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கமர்ஷியல் குருமா வைப்பதில் கெட்டிக்காரர் டைரக்டர் சுராஜ். படம் வெற்றி பெறுகிறதா, தோற்கிறதா என்பதற்கு அப்பாற்பட்டு இவரது படத்தில் நடிக்கும்போது ஒரு நல்ல நகைச்சுவை கதாநாயகனாகவும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என பல ஹீரோக்கள் நம்புகின்றனர்.
அந்த பட்டியலில் இப்போது ஜெயம் ரவியும் சேர்ந்துள்ளார்.. ஆதிபகவன், நிமிர்ந்து நில் என தோடர்ந்து சீரியஸான கேரக்டர்களிலேயே நடித்துவரும் ஜெயம் ரவிக்கு சுராஜின் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை எழுந்ததில் வியப்பேதும் இல்லை.
அதற்கேற்ற மாதிரி தற்போது சுராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இந்தப்படத்திற்கான பூஜை இன்று ஜெயம் ரவியின் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது. ‘நிமிர்ந்து நில்’ படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் ஜெயம் ரவியின் நண்பனாக நடிக்கிறார் சூரி. கூடவே கும்கி அஸ்வினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Comments
Post a Comment