பெயரை மாற்றினார் லட்சுமிராய்!!!

3rd of June 2014
சென்னை:இப்போது நியுமராலஜிப்படி பெயரை மாற்றிக்கொள்வதுதான் பேஷனாகி விட்டதே.. அது இப்போது லட்சுமிராயையும் விட்டுவைக்கவில்லை. ‘கற்க கசடற’ மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகி சினிமாவின் இலக்கணங்களை கசடற கற்றவர் லட்சுமிராய். ஆறடி அரபுக்குதிரையான லட்சுமிராய் ‘காஞ்சனா’, ‘மங்காத்தா’ படங்களின் மூலம் ரசிகர்களை கிறங்கடித்த பெருமைக்குரியவர்.
 
தற்போது ‘அரண்மனை’ ‘இரும்பு குதிரை’ ஆகிய படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் லட்சுமிராய். இந்தநிலையில்தான் தனது பெயரை மாற்றி(!) வைத்துக்கொண்டு இருக்கிறார் லட்சுமிராய்..
 
பெரிய மாற்றமெல்லாம் ஒன்றுமில்லை.. லட்சுமிராய் என்பதை ராய் லட்சுமி (RAAI LAKSHMI) என லைட்டாக மட்டுமே மாற்றியிருக்கிறார். திடீரென பெயரை மாற்ற காரணம் என்னவென்று கேட்டால் அதற்கு வித்தியாசமான பதில் ஒன்றை சொல்கிறார் லட்சுமிராய்.
 
 
இப்போதைய படங்களில் நான் அடிதடி சண்டைகாட்சிகளில் நடித்து வருகிறேன்.. லட்சுமிராய் என்கிற பெயர் அதற்கு பொருந்தாத மாதிரி மிகவும் பழமையான பெயர் மாதிரி இருக்கிறது..  வீட்டில் யாரும் என்னை லட்சுமி என பெயர் சொல்லி அழைத்ததே இல்லை.. ராய் என்றுதான் அழைப்பார்கள்.. அதனால் இப்படி மாற்றி இருந்துவிட்டுப் போகட்டுமே என வைத்தேனே தவிர வேறு பெயரை மாற்றும் உத்தேசம் எனக்கு இல்லை” என்கிறார் லட்சுமிராய்...

Comments