''மூச்சுக்காற்று என் மீது படக்கூடாது கட்டிப்பிடிக்கும் காட்சியில் வில்லன் நடிகருக்கு நடிகை அனன்யா விதித்த நிபந்தனை!!!

26th of June 2014சென்னை:கட்டிப்பிடிக்கும் காட்சியில் நடிக்கும்போது, ''மூச்சுக்காற்று என் மீது படக்கூடாது என்று வில்லன் நடிகரிடம், நடிகை அனன்யா நிபந்தனை விதித்தார்.
அதிதி


நந்தா-அனன்யா ஜோடியாக நடித்து, பரதன் டைரக்டு செய்துள்ள படம், அதிதி. இந்த படத்தை கே.பி.ராமகிருஷ்ணன் தயாரித்து இருக்கிறார். வில்லன் நடிகராக நிகேஷ்ராம் அறிமுகம் ஆகிறார். படத்தில், அனன்யாவை வில்லன் நடிகர் நிகேஷ்ராம் கட்டிப்பிடிப்பது போல்  ஒரு காட்சி இடம்பெறுகிறது.
அந்த காட்சியை படமாக்கியபோது வில்லன் நடிகரிடம், ''மூச்சுக்காற்று என் மீது படக்கூடாது'' என்று அனன்யா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

பேட்டி


இதுபற்றி 'அதிதி' படத்தின் டைரக்டர் பரதன், 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-
 
''படத்தின் கதைப்படி, நந்தா-அனன்யா இருவரும் கணவன்-மனைவி. இருவரையும் வில்லன் நிகேஷ்ராம் பிடித்து வைத்துக்கொண்டு, 'டார்ச்சர்' செய்கிறார். ஒரு நான்காம் தரமான லாட்ஜுக்குள் அழைத்து சென்று நந்தா முன்னிலையில், அனன்யாவை கட்டிப்பிடிக்கிறார்.
அனன்யாவின் முகத்தை இரண்டு கைகளால் பிடித்தபடி, அவருடைய கேசத்தை முகர்ந்து பார்க்கிறார். இந்த காட்சியை படமாக்கியபோது அனன்யா, ஒரு நிபந்தனை விதித்தார்.

''பொதுவாக நான் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதில்லை. இந்த படத்தின் கதைக்கு இப்படி ஒரு காட்சி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால் நடிக்க சம்மதிக்கிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நிகேஷ்ராமின் மூச்சுக்காற்று என் மீது படக்கூடாது'' என்றார். தனந்து நிபந்தனையை நிகேஷ்ராமிடமும் கூறி, அவர் சம்மதித்த பிறகுதான் நடிக்க ஆரம்பித்தார். ஒரே 'ஷாட்'டில் அந்த காட்சி படமாக்கப்பட்டது.''
இவ்வாறு டைரக்டர் பரதன் கூறினார்.

Comments