6th of June 2014
சென்னை:விஜய் மில்டன் இயக்கிய 'கோலிசோடா' படத்தில் நடித்தவர் சீதா. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது.
'கோலிசோடா' படத்தின் மூலம் விமர்சகர்கள், திரைநட்சத்திரங்கள் எனப்
பலரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது விஜய்மில்டன் - விக்ரம்
இணைந்துள்ள 'பத்து எண்றதுக்குள்ள' படத்தில் சமந்தாவின் தோழியாக
நடிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தில் அலுவலகம்
செல்லும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறார். இதன் மூலம் விஜய், விக்ரம் என
முன்னணி நடிகர்களின் படங்களில் இடம் பிடித்துவிட்டார் சீதா..

Comments
Post a Comment